முக்கிய குறிப்பு - இது என்னுடைய தனிப்பட்ட மேட்டர் பற்றிய பதிவு! ச்சும்மா... பர்ச்சனல் மேட்டர் கொஞ்சம் சொல்லணும்னு தோணறது! அதான் இப்பதிவு! ( என்னது உன்னோட மேட்டர் எல்லாத்தையும் சொல்லப் போறியா? ரொம்ப அசிங்கமா இருக்குமே! ) ஆர்வம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்! ஏன்னா, பதிவு ரொம்ப அறுவையா இருக்கும்! உங்களைக் கண்கலங்க வைக்கும்! ஹி ஹி ஹி ஹி ஸோ, எஸ் ஆகுறவங்க எஸ் ஆகிக்குங்க! எதையும் தாங்கும் உள்ளம் உள்ளவங்க பின்னாடியே வாங்க!
![]() |
| என்னது ஐடியாமணி சொல்றது கரெட்டா? ஒகே கேர்ள்ஸ்! தேங்க்ஸ்!! |
நான் என்னைச் சுற்றி வட்டங்கள் போடுவதில்லை! வரையறைகள் போடுவதில்லை! கட்டுப்பாடுகள் போடுவதில்லை! அவருக்காகவோ, இவருக்காகவோ பயந்து என்னுடைய மகிழ்ச்சியை ஒத்திப் போடுவதில்லை! பின்னொரு நாளில் மகிழ்ச்சியாக இருப்போம் என்று மகிழ்ச்சியை தள்ளிவைப்பதும் இல்லை! யோவ், அதான் சொன்னேனே, தனிப்பட்ட பதிவு, ரொம்ப அறுவையா இருக்கும்னு! அப்புறம் எதுக்கு தொடர்ந்து படிச்சுக்கிட்டே வந்துட்டு, கண்ணைக் கசக்கி அழுவுறீய!
அப்புறம், எனக்கு விருப்பம்கள் தான் அதிகமே தவிர வெறுப்புக்கள் மிக மிகக் குறைவு! இந்த உலகத்தில் உள்ள மனிதனின் மகிழ்ச்சியைக் கெடுப்பவர்களை நான் வெறுக்கிறேன்! அவ்வளவுதான்! விஜய் படம் வருதா? நான் ரொம்ப ஹேப்பி ஆகிடுவேன்! எனக்கு சுறா படம் கூட ரொம்ப பிடிச்சிருந்துது! அதுல கதை இருந்திச்சு, இல்லை அதெல்லாம் எனக்குத் தேவையில்லை! நான் என்ன கதைக்கு வழியில்லாமலா தியேட்டருக்குப் போறேன்! சினிமா ஜஸ்ட் எ எண்டெர்டெயின்மெண்ட்! சுறாவுல ரசிக்கும்படியா, நிறைய விஷயம் இருந்திச்சு! நல்லா கைதட்டி ரசிச்சேன்!
![]() |
| சேலையில் எங்கள் செல்லம் அழகு என்றால்..... |
மங்காத்தா வந்திச்சு! நானும் என் ஃபிரெண்ட்சும் கூட்டமா போய், கை தட்டி, விசில் அடிச்சு, செம ஜாலியா படம் பார்த்தோம்! சிலபேரு, அஜித் நல்லவா? விஜய் நல்லவரா? அப்டீன்னு அடிச்சுக்கிட்டு கட்டிப் பொரளுறாங்க! அஜித்தும், விஜய்யும் சினிமாவில் நடிப்பது நம்மை மகிழ்ச்சிப்படுத்தவே! அப்புறம் எதுக்கு ரெண்டு பேருல ஒருத்தரை மட்டும் தான் ரசிக்கணும்னு மொக்கையா திங் பண்றீங்க? எனக்கு அப்படிச் சிந்திக்க வராது! அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைவருமே நம்மை மகிழ்ச்சிப்படுத்தவே சினிமாவில் நடிக்குறாங்க! ஸோ, நான் எல்லாப் படங்களையும் பார்த்து ரொம்ப ரொம்ப ஹேப்பியாக இருக்குறேன்!
அப்புறம் இன்னும் சிலபேர் பழையா பாட்டு நல்லதா? புதிய பாட்டு நல்லதா? அப்டீன்னு மொக்கையா ஒரு விவாதம் வைப்பார்கள்! பழைய பாட்டுக் கோஷ்டி புதிய பாட்டைக் குறை சொல்லும்! புதிய பாட்டுக் கோஷ்டி பழைய பாட்டைக் குறை சொல்லும்! ஹி ஹி ஹி ஹி எனக்கு எல்லாப் பாடல்களுமே ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! “ மின்னல் போல் ஆகுமிந்த வாழ்க்கையே” என ஏ எம் ராஜாவில் இருந்து, “ இதையாரோடும் இங்கு எவரோடும் சொல்லவும் கூடாது நீ” என தி எ மோதியில் இருந்து, நீரோடும் வைகையிலே..... ஓடும் மேகங்களே..... வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே, சித்த கத்திப் பூக்களே, ரெலிஃபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, நேற்று வந்த அஸ்குலஸ்கா வரை ஒரு பாட்டையும் நான் மிச்சம் வைப்பதில்லை!
![]() |
| மார்டன் ட்ரெஸ்ஸில் இந்தத் தாய்லாந்துக் குட்டியும் கொள்ளை அழகுதான்! |
சில பழைய பாடல் விரும்பிகள் புதிய பாடல்களை கேட்பதே இல்லை! இனி சினிமாவில் புதிய பாட்டுக்கள் மட்டும் தான் வரும்! பழைய பாட்டுக்கள் வருமா? என்ன! அப்போ இனி இவர்களால் எந்தவொரு புதிய பாட்டையும் ரசிக்க முடியாது! ஹா ஹா ஹா எனக்கு இப்படியான ஒரு குறுகிய வட்டம் கெடையாது! எனக்கு ஒரு பாட்டும் மிச்சம் இல்லை! அப்புறம் சீர்காழி கோவிந்தராஜனின் பக்திப்பாடல்கள் முதற்கொண்டு, கிறீஸ்தவ கீதங்கள், நாகூர் ஈ எம் ஹனிபாவின் இஸ்லாமிய கீதங்கள் ( ஈச்சை மரத்து இன்பச் சோலையில் ) என எந்தப் பாட்டைக் கேட்டாலும் மகிழ்ச்சி, உற்சாகம் பிறந்துவிடும்! மூர்த்தி பாடும் உல்டா பாடல்களைக் கூட நான் விட்டு வைப்பதில்லை!
அப்புறம் நடிககைள் பற்றி சொல்லவே வேண்டாம்! நமக்கு அத்தனை நடிகைகளும் கனவில் வருபவர்கள் தான்! யாருக்கும் நோ என்ரி காட்டுவதில்லை! சிலபேரு சீரியஸான இலக்கியங்கள் மட்டுமே படிப்பார்கள்! கில்மா படிக்க மாட்டார்கள்! ஆனால் ஐயா அப்படி இல்லை! மல்லிகை, தீராநதி, வெளிச்சம், காலச்சுவடு போன்ற சீரியஸ் எழுத்துக்களை மிகவும் விரும்பிப்படிக்கும் அதேவேளை, சரோஜாதேவி வகையறாக்களையும் விட்டு வைப்பதில்லை! கந்தன் கருணை முதலான பக்திப்படங்களில் இருந்து நீலப்படம் வரை எதுவுமே விட்டு வைபதில்லை! அப்புறம் நீலப்படம் பார்ப்பதையும், கில்மா புத்தகம் படிப்பதையும் வெளியே ஓபனாகச் சொல்வதால் என்னுடைய கௌரவம் குறைந்துவிடும் என்று நான் ஒருபோதுமே நினைக்க மாட்டேன்!
அப்புறம் ஐடியாமணிக்கு கில்மா மட்டும் தான் தெரியும் என நினைப்பவர்களை, சீரியஸ் இலக்கியம் பற்றி விவாதிக்க வரச்சொல்லுங்கள்! ஈழத்து இலக்கிய வரலாறா, தமிழக இலக்கிய வரலாறா? பின்நவீனத்துவமா? எதைப் பற்றி வேண்டுமானாலும் அலசுவோம்! விவாதிப்போம்! ஆகவே, சில விஷயங்களை நான் வெளிக்காட்டுவதில்லையே தவிர, வெறுப்பது கிடையாது! ஆகவே, இலக்கிய உலகமும் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் தான்!
பதிவுலகிலும் சிலபேர் தம்மைச் சுற்றி சில கட்டுபாடுகள் வைத்துள்ளார்கள்! சீரியஸ் பதிவுன்னா சீரியஸ் பதிவு மட்டும்தான் எழுதுவார்கள்! கில்மான்னா கில்மா மட்டும்தான் எழுதுவார்கள்! ஆனால் எனக்கு இந்த வரையறை பிடிப்பதே இல்லை! எனது பதிவுகளைப் படிப்பவர்களுக்கு இது புரியும்! விரைவில் பின்நவீனத்துவக்காரர்களுக்கு எதிராக உள்குத்து போட்டு, பதிவுலகில் மாபெரும் இலக்கியச் சண்டை போடலாம்னு இருக்கேன்! அத்துடன் “ பெண்களின் தொடையும் முதுகும் பாலியல் உறுப்புக்களா?” என்று ஒரு கிளு கிளு பதிவும் போட இருக்கிறேன்!
![]() |
| எமது ஜனாதிபதியும் மேடமும்! தல உன்னோட ரசனையே தனிப்பா! |
சிலபேரு மஹால்க்சுமியாட்டம் இருக்குற அடக்க ஒடுக்கமான கிராமத்துப் பொண்ணுகள விரும்புவாங்க! மார்டர்ன் பொண்ணுங்களைத் திட்டுவாய்ங்க! ஹா ஹா ஹா நமக்கு எல்லாம் பொண்ணுங்களையும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!
ஆகவே, எனக்கு கட்டுப்பாடு கெடையாது, நான் மிக மிகச் சுதந்திரமானவன்! அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்! அப்புறம் இங்கு பாரிஸில் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் எண்ணிலடங்காதவை! ஃபிரெஞ்சுப் ஃபிகர்களின் தொடையழகு + இடையழகு + நடையழகு எல்லாமே பிடிக்கும் என்றால், ஃபிரெஞ்சுப் போலீஸின் ஸ்மார்ட்டும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! இன்னும் சிலர் ஃபிரான்ஸில் இருந்துகொண்டு, இங்கிலாந்தைப் பார்த்து கொட்டாவி விடுவார்கள்! ஃபிரெஞ்சு படிக்க அலுப்பு! லண்டன் போனால், இருக்குற கொஞ்ச நஞ்ச இங்கிலீஸை வைச்சு சமாளிக்கலாம்ல!
ஆனால் எனக்கு ஃபிரெஞ்சு மொழி ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! ஃபிரான்ஸ் அதைவிட ரொல்ம்பப் பிடிக்கும்! அப்போ நான் ஏன் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன்? சிலபேர் லா சப்பலை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு, “ ஐயோ ஃபிரான்ஸ் அழகில்லை” என்பார்கள்! சிரிக்காமல் இருக்க முடியாது என்னால்! பரிஸை விட்டுக் கொஞ்சம் வெளியே போனால் தான் ஃபிரான்ஸின் அழகு புரியும்!
நண்பர்களே, இந்த பூமி மிகவும் ரசனை மிக்கது + அழகானது + சொர்க்கமானது! இது மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ மட்டுமே படைக்கப்பட்டது! மனிதனுக்குத்தான் மகிழ்ச்சியினைக் கண்டுகொள்ள முடிவதில்லை! எனது விருப்பமெல்லாம் என்னைப் போலவே அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது! நமக்கு முன்ன பின்ன தெரியாத ஒருவருக்காக, கண்ணால் காணாத ஒருவருக்காக நாம் நம்மைச் சுற்றி கோடுகள் வரைந்து, நமது ஆசைகளையும், விருப்பங்களையும், எண்ணங்களையும் பொத்தி பொத்தி வாழ வேண்டும் என்கிற அவசியம் இம்மியளவும் வேண்டாம்! அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம்!
ஆ...... சொல்ல மறந்துட்டேன்! “ கில்மா படிக்காமல், வை திஸ் கொல வெறி போன்ற பாடல்களை ரசிக்காமல், பெண்களைச் சைட் அடிக்காமல் ஒருவித கட்டுப்பாட்டுடனும், அச்சத்துடனும் வாழ்வதன் மூலம், 200 வருஷங்கள் வாழ்ந்துவிட முடியும் என்றால், சொல்லுங்கள்! நான் வாழ முயல்கிறேன் - கட்டுப்பாடாக!
ஹி ஹி ஹி ஹி ஹி !!!
.




19 comments:
பதிவர்கள் என்றால் ஒரே வரையறைக்குள் இருக்கக்கூடாது என்று விரும்புபவன் நான். உங்களைப் போன்றவர்கள் பதிவுலகிற்கு அவசியம். நீங்கள் எனக்கு முதன் முதலில் எனக்கு எதிரான பின்னுட்டம்தான் போட்டீர்கள் அப்போது உங்கள்மீது கோபப்படவில்லை உங்கள் நேர்மையை பார்த்து வியந்தேன்.
தொடர்ந்து அசத்துங்கள்
@சந்ரு
பதிவர்கள் என்றால் ஒரே வரையறைக்குள் இருக்கக்கூடாது என்று விரும்புபவன் நான். உங்களைப் போன்றவர்கள் பதிவுலகிற்கு அவசியம். நீங்கள் எனக்கு முதன் முதலில் எனக்கு எதிரான பின்னுட்டம்தான் போட்டீர்கள் அப்போது உங்கள்மீது கோபப்படவில்லை உங்கள் நேர்மையை பார்த்து வியந்தேன்.
தொடர்ந்து அசத்துங்கள் ://///
வாங்க சந்துரு!
உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு! உங்களின் அந்த இஸ்லாமியர்கள் பற்றிய பதிவினை நான் கண்டித்ததைத்தானே குறிப்பிடுகிறீர்கள்!
ஆமாம், சந்துரு, உங்களைக் கண்டித்ததோடு மட்டுமல்லாது, உங்களைப் பற்றி முறைப்பாடு செய்து தமிழ்மணத்துக்கு மடலும் அனுப்பினேன்!
ஆனால் உங்கள் மீது எனக்கு எவ்வித கோபமும் இல்லை! பதிவுலகில் நீங்கள் எம்முடன் நெருங்கிப் பழக வேண்டும் என்பதே எனக்கு விருப்பம்! உங்களை பிரதேச ரீதியா ஒதுக்குபவர்கள் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்!
உங்களைத் துரோகிகளாக சித்திரிப்பவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன்! கவலைப்படாதீர்கள்! நாம் இருக்கிறோம்! உள்குத்து போட்டே, அவர்களை நோவடிப்போம்!
யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் இணைப்போம்!
உங்கள் புரிதலுக்கு நன்றிகள் iடியாமணி... உண்மையாகவே நான் வலைப்பதிவிலிருந்து ஒதுங்கி இருந்தமைக்குக் காரணம் என்னை பிரதேசவாதம் பேசுபவனாக சிலர் சித்தரித்துவிட்டனர். கடந்தகால அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டேன். அதை பொறுக்க முடியாத சிலர் பிரதேசவாதம் பேசுபவன் என்று என்னை சித்தரித்துவிட்டனர்.
ஆரம்பகாலம்முதல் பல இந்திய பதிவர்களோடு தொடர்பினை கொண்டிருந்தவன் நான். விசமப்பிரசாரங்கள் மூலம் நான் கருத்துரை இடுவதனை நிறுத்தியதோடு இலங்கைப் பதிவர்களின் வலைப்பதிவுகளை வாசிப்பேன் கருத்துரையிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் கருத்துரையிட தயங்கினேன் அந்தளவிற்கு ஓரங்கட்டப்பட்டேன் என்பதுதான் உண்மை.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல நினைப்பவன் நான்.
அட கிட்டதட்ட நானும் அப்படிதான் ஆனா பின்நவீனத்துவ இலக்கியங்கள் ஏனோ எனக்கு கடுப்படிக்கும். சில வேளை அதை புரிந்து கொள்ளும் அறிவுதான் என்னிடம் இல்லை போலும்..!!!?
அப்புறம் உன்னிடம் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருக்கு.!! ஹி ஹி..!!
வணக்கம் மச்சி,
நீ ஒரு வித்தியாசமான பிறப்பு என்று நான் சொன்னால் அது உன்னைப் புகழ்வது போலாகி விடும்.
ஆனாலும் உன் ரசனை கொஞ்சம் மாறுபட்டது தான். வரவேற்கிறேன்.
ஆனால் சமீபகாலமாக இலக்கிய வகையறாக்களைக் காணவில்லையே!
இனி எப்போது அவற்றையெல்லாம் எழுதப் போகிறாய்?
இஸ்..............ஸப்பா,
உங்களைப் பற்றி இப்படி ஒரு விளக்கமா?
"எது தோணுதோ அதை எழுதுவேன்" அப்படீங்குற ஒரு வரிக்கு இவ்வளவு பெரிய மொக்க பதிவா?
நல்ல வருவீங்க சார், நல்ல வருவீங்க...
@சந்ரு
ஆரம்பகாலம்முதல் பல இந்திய பதிவர்களோடு தொடர்பினை கொண்டிருந்தவன் நான். விசமப்பிரசாரங்கள் மூலம் நான் கருத்துரை இடுவதனை நிறுத்தியதோடு இலங்கைப் பதிவர்களின் வலைப்பதிவுகளை வாசிப்பேன் கருத்துரையிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் கருத்துரையிட தயங்கினேன் அந்தளவிற்கு ஓரங்கட்டப்பட்டேன் என்பதுதான் உண்மை.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல நினைப்பவன் நான்.:////
சந்த்ரூ, உங்கள் வலிகளைப் புரிந்துகொள்கிறேன்! விடுங்கள்! கவனிப்போம்!
@காட்டான்
அட கிட்டதட்ட நானும் அப்படிதான் ஆனா பின்நவீனத்துவ இலக்கியங்கள் ஏனோ எனக்கு கடுப்படிக்கும். சில வேளை அதை புரிந்து கொள்ளும் அறிவுதான் என்னிடம் இல்லை போலும்..!!!?
அப்புறம் உன்னிடம் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருக்கு.!! ஹி ஹி..!!/////
நன்றி காட்டான் அண்ணர்! நீங்கள் ஒரு யூயூயூயூயூத்தப்பா! எனக்கு நல்லாவே தெரியும்!
அருமை, அருமையிலும் அருமை. அருமை என்பதை அறுவை என்று திருத்திப் படிக்கவும்.
எங்க விருப்பங்களை கூட எழுத முடியாத சூழ்நிலைகள். உதாரணத்துக்கு நான் ஒரு கில்மா பட விமர்சனமோ, கில்மா விசயமோ எழுதினா நான் ஏதோ கில்மா பிரியன் என நினைத்து ஒதுக்குவார்கள். வெறும் பதிவை பதிவாக படிக்காமல் பதிவர்களுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கும் நிலைமை எப்ப மாறுதோ அப்பத்தான் பதிவுலகம் உருப்படும்.
நான் விஜய் பற்றி அடிக்கடி எழுதும் போது “அப்படிச் செய்ய வேண்டாம். உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமாக எதிர்பார்க்கிறோம்(?) என்றார்கள். என் விருப்பத்தையே என்னால எழுத முடியல. மீறி எழுதினா ப்ளாக், பேஸ்புக் என தாக்குறாங்க.
ஆக மொத்தத்தில ஆணியே பிடுங்க வேணாம் என விட்டிட்டன்.
மணி சார், இன்னா இது??? இப்படி ஒரு மனுசனா நீங்க?? பரவாயில்ல நான் ரசிக்கும் படி இருக்கிறீங்க என்றதால ஹப்பி.. உங்க சீரியஸ் ஆன ஒரு இலக்கியப் பதிவை வாசிக்க ஆவல். இலக்கியம் பற்றி எழுதும் போது சொல்லுங்க பாஸ் நான் ஒரு தலைப்பு தாறன்.. அத வச்சு செமையா ஒரு உள்குத்து பதிவு போடுங்க.. சாகடிக்கிற மாதிரி.. ஹி ஹி ஹி.. (முடிஞ்சால் நம்ம ஜீவா ஐயாட்ட சொல்லி மல்லிகையிலையும் போட்டிடுவம். ஹி ஹி )
வணக்கம் சார்
பதிவுலகில் சிலர் இருக்கின்றார்கள்
ஏன் மொக்கை,பதிவு எழுதுகின்றாய் எங்களை போலவே காத்திரமான விடயங்களை எழுது என்பார்கள் நாங்கள் எழுதவில்லை என்றால் உடனே இவன் ஹிட்ஸ்க்காக எழுதுகின்றான் என்று கதையை தொடக்கிவிடுவார்கள்.
ஆனால் நாங்கள் ஒரு காத்திரமான பதிவு எழுதினால் அதுக்கு வரமாட்டார்கள்.பெரும்பாலும் அவர்கள் வருவது மொக்கை,கில்மா பதிவுகளுக்குத்தான் ஆனால் வெளியில் அட்வைஸ்
தொடர்ச்சியாக சீரியசான பதிவுகளே போட்டுக்கொண்டு இருந்தால் பதிவுலகில் யாரும் இல்லாத கடையில் டீ ஆத்தும்
நிலைதான்.இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
இந்த பதிவுலக சூட்சுமம் புரியாமல் தங்கள் தளத்துக்கு வாசகர்கள் வருவது குறைந்தால்
பிறகு அவன் ஹிட்ஸ்க்காக எழுதுகின்றான் இவனுக்கு ஓட்டு அதிகமாக கிடைக்கின்றது என்று பிரபலமாக இருக்கும் பதிவர்களை குறை சொல்வார்கள்.ஹி.ஹி.ஹி.ஹி.
இப்படியான பதிவர்களை என்னவென்று சொல்வது
எனது விருப்பமெல்லாம் என்னைப் போலவே அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது!
என்பக்கமும் வந்து பின்னூட்டம் பகிர்ந்து கொண்டால் நானும் மகிழ்வேனே. எப்படி வசதி மணி?
ஹேஹே கில்மா படித்தால் 200 வருஷம் வாழலாமா?
இந்த வெளிப்படையான நேர்மைதான் நிறையப் பிடிச்சிருக்கு !
மணியின் கருத்துக்கள் எப்பவும் மணிதான் )))
கில்மா படிக்காதவன் எழுதாவனுக்கு கணக்கா வேணாம் ஒரு சிலை வைப்பாங்களா இருந்தாலும் முயற்சிக்கலாம் :))))
ஆனால் நாங்கள் ஒரு காத்திரமான பதிவு எழுதினால் அதுக்கு வரமாட்டார்கள்.பெரும்பாலும் அவர்கள் வருவது மொக்கை,கில்மா பதிவுகளுக்குத்தான் ஆனால் வெளியில் அட்வைஸ்//
நெத்தியடி பேனா வீரா..
ஹும், எத்தனையோ பதிவுகளில் இதுவும் ஒன்று.....
Post a Comment