அன்பார்ந்த அம்மாமார்களே, ஐயாமார்களே! ( தமிழில் - லேடீஸ் அன்ட் ஜெண்டில்மென் ) அனைவருக்கும் புதன்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!
எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவுப்பு - என்னோட ஜாதகத்துல கடந்த 4 மாசமா, ஏழரைச் சனி நிலவியதால், என்னால் மொக்கைப் பதிவுகள் போட முடியவில்லை! இதனால், ஒரே சீரியஸ் பதிவு வா போட்டுக் கொலையா கொன்னுகிட்டு இருந்தேன்! ஆனா, நேத்து சாயந்தரம் ஆறு முப்பத்தியெட்டு மணிக்கு, என்னைப் பீடித்திருந்த ஏழரைச் சனி, எட்டரைச் சனியாக மாறிட்டதால, இனிமேல் மொக்கைப் பதிவுகள் மட்டும்தான் போடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்! உலகில் இல்லாத பொருளைக் கொண்டு சத்தியம் பண்ண முடியாது என்பதால், இது இலியான இடுப்பு மீது சத்தியம் என்ற வாக்கியத்தை இவ்விடத்தில் நான் சேர்க்க விரும்பவில்லை!
இனிமேல் மொக்கையோ, மொக்கை ஓவர் மொக்கையெல்லாம் போடுவேன்! நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கோடி தடவை போட்ட மாதிரி! அது ஏன்னா, உலகத்துல இருக்குற, எந்தக் கம்பியூட்டரில, ஓபன் பண்ணாலும் என்னோட மொக்கையப் படிக்க முடியும்! நீங்க வேணும்னா, நம்ம சகலை ஒபாமாவோட பர்சனல் கம்பியூட்டர்ல என்னோட ப்ளாக் அட்ரெஸ்ஸ அடிச்சுப் பாருங்க! அங்கேயும் என்னோட மொக்கைப் பதிவு தெரியும்! ஸோ, நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கண்டிப்பா கோடி தடவை போட்ட மாதிரி தான்!
சிலபேர், மொக்கையோட உச்சக்கட்டம் மரண மொக்கைன்னு சொல்றாங்க! அதாவது ஒருத்தனோட ஓவர் மொக்கையைப் படிச்சுட்டு “ மரண மொக்கை! தாங்க முடியல” அப்டீன்னு கமெண்டு போடுறாங்கோ! என்னைப் பொறுத்தவரை மொக்கையின் எல்லை என்பது மரணமொக்கை அல்ல! அதையும் தாண்டி நீளமானது.... நீளமானது! என்னிடம் மரணமொக்கை மட்டுமல்ல, பொண ஊர்வல மொக்கை, இடுக்காட்டு மொக்கை, வெட்டியான் மொக்கை, 8 ம் நாள் கிரியை மொக்கை, 6 ம் மாத நினைவுநாள் மொக்கைனு ஏகப்பட்ட வரைட்டில மொக்கைஸ் இருக்கு!
அப்புறம் மொக்கை பற்றி ஒரு சிறப்பு மாநாடு போன வாரம் அமெரிக்காவுல நடந்திச்சு! எதுக்காக, அந்த மாநாடுன்னா, மொக்கை என்ற சொல்லுக்கு, இங்கிலீஸ், ஃப்ரெஞ், ஸ்பானிஸ் போன்ற மொழிகளில் சொற்களைக் கண்டறியும் மீட்டிங்! ஒவ்வொருத்தனும் தங்கள் தங்கள் மொழியில் மொக்கை யை எப்படி மொழி பெயர்க்கலாம் அப்டீன்னு பேசிக்கிட்டாங்க! நம்ம ஊரு கஞ்சாவுக்குக் கூட வெள்ளைக்காரன் ஹெரோயின் அப்டீன்னு ஒரு வார்த்தை வைச்சிருக்கான்! ஆனால் மொக்கை அப்டீங்கறதுக்கு அவங்ககிட்ட ஒரு வார்த்தை இல்லை! அந்த மீடிங்குல 4 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணாங்க! எந்த முடிவும் எடுக்கல!
கடைசியில நான் எந்திரிச்சு, “ எதுக்கு மொக்கையை உங்க உங்க மொழியில் ட்ராஸ்லேஷன் பண்ணணும்? பேசாம மொக்கை என்ற சொல்லையே நீங்களும் பயன்படுத்துங்களேன்! உங்க ஜனாதிபதி ஒபாமாவோட பேரை நாங்க தமிழிலும் ஒபாமா என்றே சொல்றோம்! அதை மொழிபெயர்க்கிறதில்லையே! ” அப்டீன்னு உரையாற்றினேன்! அப்புறம் என்ன, கூட்டத்தில் பலத்த கைதட்டல்! உலகத்தில் இருக்குற அத்தனை மொழிக்காரரும், மொக்கையை தங்கள் மொழியிலும் சேர்த்துக்கிட்டாங்க!
இப்படி, மொக்கை என்பதை உலக மொழிகளில் ஒன்றாக்கி, எமது மொழிக்குப் பெருமை சேர்த்த என்னை இனிமேல், “ மொக்கைக்குப் பேர் தந்த மொக்கையன்குடி மொக்கையனார்” என்று நீங்கள் அழைத்து, விளித்து, விழா எடுப்பது பற்றி எனக்கு கவலையில்லை! ஆனால் அப்படி ஒரு விழா நடந்தால், கண்டிப்பா கலா மாஸ்டர் அன்ட் குறூப்போட டான்ஸ் இருக்கணும்! அப்போத்தான் விழா களைகட்டும்!
ஆ... சொல்ல மறந்துட்டேன்! இப்பவே கூகுள் ட்ரான்ஸ்லேஷனில் மொக்கை அப்டீன்னு டைப் செஞ்சுட்டு, எல்லா லாங்குவேஜிலும் செலெக்ட் பண்ணி பாருங்க! எல்லா மொழியிலும் Mokkai அப்டீன்னுதான் வரும்! நம்ம ஊரு கக்கூசுக்கே, டாய்லெட் அப்டீன்னு வார்த்தை கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்கு, மொக்கைக்கு ஒரு வார்த்தை கண்டுபுடிக்க முடியாமல் போனது! வெட்கம்! வேதனை! அவமானம்!
அப்புறம் கடந்த 4 மாதங்களில், நான் சைட் அடித்த நாலாயிரத்தி நானூறு ஃபிரெஞ்சுப் பிகர்கள் பற்றி ஒரு பதிவுகூட நான் எழுதலை அப்டீன்னு மனசு உறுத்துது! ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பதிவுபடி பார்த்தாலும், ஒரு வருஷத்துல 365 ஃபிகர்கள் பற்றித்தான் எழுதலாம் அப்டீன்னு நினைக்காதீங்க! 366 ஃபிகர்கள் பற்றியும் எழுதலாம்! ஆனா ஒண்ணு, அதற்குள் அடுத்த வருஷம் பொறந்திடும்! அதுபோக என்னைச் சைட் அடித்த ஃபிகர்கள் பத்தியும், என்னோட சைட்டுல அடிச்ச ஃபிகர்கள் பற்றியும், “ தொட்டணைத்தூறும் ஃபிகர்க் கேணி” அப்டீன்னு ஒரு பொஸ்தகம் எழுத இருக்கேன்!
அதாவது, நீ மண்ணைத்தோண்டத்தோண்ட, அதுல நீர் பெருகிக்கிட்டே இருக்கும்! அதுமாதிரி, நீ சைட் அடிக்க சைட் அடிக்க ஃபிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்! இதுதான் ஃபிகராலஜி தத்துவம்! அப்புறம் நான் மொக்கைப் பதிவுகளை மறுபடியும் ஆரம்பித்த ஜனவரி 11 ஆகிய இன்றைய நாளை “ மொக்கையர்ஸ் டே” அப்டீன்னு நீங்க கொண்டாட ஆசைப்படலாம்! அதற்கான அனுமதி கேட்டு, எனக்கு மெயில்லாம் அனுப்பாதீங்க! பர்மிஷன் ஆல்ரெடி கிராண்டட்! அப்புறம் நம்ம பவர்ஸ்டாரோட, “ சீனு கொலை வழக்கு” படத்தை அடுத்த ஜனவரி 11 ல ரிலீஸ் பண்ண வைச்சு, மொக்கையர்ஸ் டே வை ஒரு அர்த்தமுள்ள தினமாக நீங்க கொண்டாடலாம்!
அப்புறம் நான் மொக்கை போடணும்னு முடிவெடுத்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! அதாவது நேத்திக்குச் சாயந்தரம் என்னோட கடைக்கு ஒரு பொண்ணு வந்திச்சு! கையில குழந்தை ஒண்ணும் வைச்சிருந்துது! “ அழகான பெண்கள் என் கண்ணெதிரே வரும் போது, கையில் குழந்தையுடன் வராத மாதிரி பார்த்துக்கொள் கடவுளே! அதை என்னால தாங்க முடியாது” அப்டீன்னு நான் போகாத கோயில் இல்ல! வேண்டாத தெய்வம் இல்லை! ஆனாலும் பாருங்க, மறுபடியும் மறுபடியும் அழகான ஃபிகர்களை கையில் குழந்தையுடன் எனக்கு முன்னாடி அனுப்பி என்னை வெறுத்தேத்துறாரு கடவுள்! அதுசரி, கடவுள் பக்தர்களைச் சோதிக்கும் போது துன்பத்தைக் கொடுத்துத்தானே சோதிப்பாராம்! - அப்டீன்னு நம்ம புராணங்கள் சொல்லல! நாமளா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டோம்!
அப்புறம் அந்தப் பொண்ணை நான் உத்துப் பார்த்தேன்! அவளும் என்னை உத்துப் பார்த்தாள்! நானும் பார்த்தேன்! அவளும் பார்த்தாள்! “ உனக்கு மாட்டுக்கறி சமைச்சு வைச்சிருக்கேன்! வீட்டுக்கு வர்ரியா? “ அப்டீன்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு! நானும் சரின்னேன்! வேலை முடிஞ்சு அவளோட வீட்டுக்குப் போனேன்! அவ நல்லா வாய்க்கு ருஷியா வக்கணையா சமைச்சு வைச்சிருந்தா! நானும் நல்லா சாப்பிட்டேன்! அப்போத்தான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு! இனிமேல் மொக்கைப் பதிவுதான் எழுதணும்னு! அதான் இன்னிக்கு மொக்கையை ஆரம்பிச்சுட்டேன்!
நீ அந்தப் பொண்ணுவீட்டுல மாட்டுக்கறி சாப்பிட்டதுக்கும், மொக்கைப் பதிவுக்கும் என்னையா சம்மந்தம்?
ஹி ஹி ஹி ஹி மொக்கைப் பதிவிலுமா லாஜிக் பார்ப்பீங்க?
சிந்திச்சு எழுதியது,
பவுடர்ஸ்டார் டாக்டர் ஐடியாமணி.
நாளைக்குச் சந்திப்போம்க!
.


21 comments:
http://www.generationneeds.blogspot.com/
மது பார்க்கம் விருந்து!
ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள்
யோவ் இந்த இலியானா புள்ளையின் படத்தை பார்க்க பார்க்க என்னமோ செய்யுது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இலியானாவுக்கு இடுப்பு இல்லை என்று மொக்கை பதிவில் சொன்னதால் சும்மா விடுறம் இல்லை என்றால் தெரிந்திருக்கும்
மொக்கை என்றால் நீங்கதான்.
பதிவுலகில் மொக்கையை ரசிக்கவும் அதிகளவான வாசகர்கள் இருக்கின்றார்கள்
எனவே இலியானாவை பார்த்து பார்த்து போடுங்க மச்சான் சார் அதாவது இலியானா பத்தி மொக்கை போடுங்க என்று சொல்ல வந்தேன்
அன்பார்ந்த அம்மாமார்களே, ஐயாமார்களே! ( தமிழில் - லேடீஸ் அன்ட் ஜெண்டில்மென் ) அனைவருக்கும் புதன்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!
//
ஹே...ஹே...
வணக்கம் மச்சி,
ஆமா, நீங்க ஆராத்தி எல்லாம் எடுக்க மாட்டீங்களோ?
வெறுமனே கும்பிடுவது மட்டும் தான் உங்க தொழிலா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உலகில் இல்லாத பொருளைக் கொண்டு சத்தியம் பண்ண முடியாது என்பதால், இது இலியான இடுப்பு மீது சத்தியம் என்ற வாக்கியத்தை இவ்விடத்தில் நான் சேர்க்க விரும்பவில்லை!.//
ஹே...ஹே..
இதெல்லாம் இல்லாத பொருளா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நமீதா பூப்சு.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்
இனிமேல் மொக்கையோ, மொக்கை ஓவர் மொக்கையெல்லாம் போடுவேன்! நான் ஒருதடவை மொக்கை போட்டா,.//
யோவ்...நீ ஒரு தடவை குளிச்சாலே கோடி தடவை குளிச்ச மாதிரி.
மொதல்ல அதை ஓடிப் போய் பண்ணு மேன்.
என்னைச் சைட் அடித்த ஃபிகர்கள் பத்தியும், என்னோட சைட்டுல அடிச்ச ஃபிகர்கள் பற்றியும், “ தொட்டணைத்தூறும் ஃபிகர்க் கேணி” அப்டீன்னு ஒரு பொஸ்தகம் எழுத இருக்கேன்!
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்..
குளிக்காமல் நாத்த மருந்து அடித்துக் கொண்டு உலகை வலம் வருவது எப்படி?
அப்படி ஓர் புக் போடப் போறதா சொன்னியே. அது எப்போ வரும் மச்சி?
யோவ்...நீர் மாட்டுக்கறி சாப்பிட்டதுக்கும், மொக்கப் பதிவுக்கும் என்ன லாஜிக் இருக்கு? மரண மொக்கையாப் போட்டு அழ வைச்சிட்டியே மாமு!
மச்சி, இந்தப் பதிவில மொக்கை கொஞ்சம் கம்மியா இருக்கு!
அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@ஓசூர் ராஜன்
ttp://www.generationneeds.blogspot.com/
மது பார்க்கம் விருந்து!
ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் :///////
அண்ணே ஓசூர் அண்ணே, ஏன்ணே என்னைய அழ வைக்கிறீங்க? நான் பாவம் இல்லையா? காலைல 5 மணிக்கு எந்திரிச்சு, 6 டிகிரி குளிருக்க நடுங்கி நடுங்கி, ஒரு மொக்கைப் பதிவைப் போட்டா, அதைப் பத்தி ஒரு வார்த்தையும் சொல்லாம, ஏதோ விளம்பரம் பண்ணிட்டுப் போயிருக்கீங்களே,
இது நியாயமா?
@குட்டிப்பையன்
இலியானாவுக்கு இடுப்பு இல்லை என்று மொக்கை பதிவில் சொன்னதால் சும்மா விடுறம் இல்லை என்றால் தெரிந்திருக்கும் ////
யோவ், குட்டிப்பையா, இலியானாவுக்கு எங்கையா இடுப்பு இருக்கு?
இல்லையானா - இலியானா!
இருந்தால் - வேறு யாரோ!
@குட்டிப்பையன்
மொக்கை என்றால் நீங்கதான்.
பதிவுலகில் மொக்கையை ரசிக்கவும் அதிகளவான வாசகர்கள் இருக்கின்றார்கள்
ஆஹா, தகவலுக்கு நன்றி குட்டிப்பையா/ இனி ஒன்லி மொக்கைதான்!
@நிரூபன்
ஹே...ஹே...
வணக்கம் மச்சி,
ஆமா, நீங்க ஆராத்தி எல்லாம் எடுக்க மாட்டீங்களோ? ////
ஆராத்தின்னா, ஆர்த்தியோட சிஸ்டர் தானே!
@நிரூபன்
ஹே...ஹே..
இதெல்லாம் இல்லாத பொருளா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நமீதா பூப்சு.....
அவ்வ்வ்வ்வ்வ்வ் /////
யோவ், எதுக்குயா நமீதாவ இதுக்குள்ள இழுக்குறே?
@நிரூபன்
யோவ்...நீ ஒரு தடவை குளிச்சாலே கோடி தடவை குளிச்ச மாதிரி.
மொதல்ல அதை ஓடிப் போய் பண்ணு மேன்.//////
நோ, நான் 2012 க்குத் தேவையான குளிப்பை 01.01.2012 அன்று 2 நிமிஷம் குளிச்சு, நிறைவேத்திட்டேன்!
இனி 01.01.2013 ல தான் குளிப்பேன்!
@நிரூபன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்..
குளிக்காமல் நாத்த மருந்து அடித்துக் கொண்டு உலகை வலம் வருவது எப்படி?
அப்படி ஓர் புக் போடப் போறதா சொன்னியே. அது எப்போ வரும் மச்சி? ///////
இந்த வாரம் போடுறேன் மச்சி!
@நிரூபன்
யோவ்...நீர் மாட்டுக்கறி சாப்பிட்டதுக்கும், மொக்கப் பதிவுக்கும் என்ன லாஜிக் இருக்கு? மரண மொக்கையாப் போட்டு அழ வைச்சிட்டியே மாமு! /////
அடுத்து இடுகாட்டு மொக்கை போடலாம்னு இருக்கேன்! என்ன சொல்றே?
@நிரூபன்
மச்சி, இந்தப் பதிவில மொக்கை கொஞ்சம் கம்மியா இருக்கு!
அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.////
அடீங்! இப்பதான் மரண மொக்கைன்னு சொன்னே!
மொக்கையா? ஒண்ணும் புரியல! ஹிஹி ஆனால் இதையெல்லாம் அனுமதிக்கிறாங்களா?
@shanmugavel
மொக்கையா? ஒண்ணும் புரியல! ஹிஹி ஆனால் இதையெல்லாம் அனுமதிக்கிறாங்களா?://////
ஆமாண்ணே! இப்பவெல்லாம் இதுக்குத்தான் மதிப்பாம்!
அட போய்யா ஒரு இழவும் புரியல.. கடைசி பந்தி மட்டும் புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு..!!
Post a Comment