எல்லோருக்கும் ஞாயிற்றுக்கிழமை அந்திநேர வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
என்னோட பர்ஸ்ட் லவ்வு பத்தி பதிவு போடச் சொல்லி, இதுவரைக்கும் நாலுலட்சத்து முப்பது லட்சம் மெயில் வந்திருக்கு! அதுல பாதி மெயில் இங்கிலீசுல இருக்குறதால நான் படிச்சுப் பார்க்கல! ஏன்னா எனக்கு இங்கிலீசு ரீட் பன்ணத்தான் தெரியுமே தவிர வாசிக்கத் தெரியாது! சரி வாங்க என்னோட பர்ஸ்ட் லவ்வு பத்தி சொல்றேன்!
![]() |
| ஓரமா இருக்குறது மியூசிக் டீச்சர் |
அப்போ, எனக்கு 13 வயசு! காதல்கோட்டை படம் வந்து செமையா போயிட்டு இருந்திச்சு! ஒருநாள் அந்தப் படத்தை எங்க ஊருல இருக்கும் மினி தியேட்டரில், என்னோட ஃபிரெண்டு பார்த்தான்! “ என்ன மச்சி கதை?”ன்னேன்! அவன் சொன்னான் “ பார்க்காம லவ் பண்ணுறதுதான் கதை”ன்னு! “ ஓகோ! படத்தைப் பார்க்காம லவ் பண்ணணும் போல”னு நெனைச்சுக்கிட்டு, நான் தியேட்டர் வாசலில வேர்க்கடலை வாங்கி கொறிச்சுக்கிட்டு, வீட்டுக்கு வந்துட்டேன்!
அப்பத்தான் எனக்கும் யாரையாச்சும் லவ் பண்ணணும்னு தோணிச்சுது! என்னோட சயன்ஸ்டீச்சர், மதமெட்டிக்ஸ் மாஸ்டரை லவ் பண்ணியதால, என்னால மியூசிக் டீச்சர லவ் பண்ண முடியல! ஏன்னா, மதமெட்டிக்ஸ் மாஸ்டரோட சம்சாரம்தான் நம்ம மியூசிக் டீச்சர்! தன்னோட புருஷனுக்கும், சயன்ஸ் டீச்சருக்கும் இடையே இருந்த லவ்வ பிரிக்கும் வேலைல அவ பிசியா இருந்ததால, அவவுக்கு நான் எழுதி வைச்சிருந்த லவ் லெட்டர்ஸ் எல்லாத்தையும், ஒரு பெட்டிக் கடைல குடுத்து 5 தீபாவளி வாழ்த்து அட்டை வாங்கினேன்! அதுல சமயபாட டீச்சரோட பேர எழுதி, அவவுக்கு கொடுத்தேன்! அந்த நேரம் பார்த்து, அவவுக்கு ட்ராஸ்பர் ஆகி, வேற ஊருக்குப் போயிட்டாங்க!
சரி வேற வழியே இல்லைன்னு புரிஞ்சு போய்ச்சு! அதுனால நான் என்கூட படிச்ச பரிமளாவ லவ் பண்ணலாம்னு யோசிச்சேன்! அதுக்குள்ள, பரிமளாவோட ஃபிரெண்டு சிரிமளா எனக்கு லெட்டர் குடுத்தா! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்! பரிமளாவா? சிரிமளாவா? அப்டீங்கற குழப்பத்துல நான் நாலுநாளா குளிக்கல! ஒரு நாள் ஒரு ஃபிரெண்டு வீட்ட போனேன்! அவகிட்ட சொன்னேன் “ மச்சி! எனக்கு பரிமளாவ புடிச்சிருக்கு! ஆனா கிரிமளா என்னைய லவ் பண்றா! என்னால முடிவெடுக்க முடியலை” அப்டீன்னு சொன்னேன்! சொல்லிட்டு, அப்படியே அவன் வீட்டுலேயே படுத்து தூங்கிட்டேன்! காலைல எந்திரிச்சேன்! அப்போதும், பரிமளாவா? சிரிமளாவான்னு செம குழப்பம்!
எல்லோரும் குழப்பம் வரும் போது தலைமுடிய பிய்ச்சுக்குவாங்க! சரி நானும் கொஞ்சம் முடியைப் பிய்ச்சுக்குவோம்னு தலைக்கு கிட்ட கையைக் கொண்டு போனேன்! அங்க ஒரே மொட்டையா இருந்திச்சு! உடனே ஃபிரெண்டு சொன்னான்! “ மச்சி நீதானே நேத்திக்கு சொன்னே! “முடி’ எடுக்க முடியலைன்னு! அதான் நீ தூங்கும் போது மொட்டை போட்டுட்டேன்”னு சொன்னான்! அவனுக்கு நான் பக்குவமா புரிய வைச்சேன்! என் மேல இவ்வளவு அக்கறையா இருக்குற அவனுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ என்று யோசித்தேன்! அப்போ, எனக்கு ஒரு ஐடியா தோணிச்சுது! உடனே, ஒரு அழிரப்பர் எடுத்து, சிரிமளா தந்த கடிதத்தில் இருந்த என்னோட பேரை அடிச்சுச்சு, அதுல என்னோட நண்பர் பேர போட்டுட்டேன்! உடனே, என்னோட ஃபிரெண்டுக்கும், சிரி மளாவுக்கும் லவ்வு ஸ்டார்ட் ஆகிட்டுது! அவங்க அடுத்தமாசமே கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டாங்க! அப்போ எனக்கு 14 வயசு!
எனக்கோ, லவ் பண்ணுற ஆசை ரொம்ப அதிகம் ஆச்சு! நம்ம ஊருல ஒருநாள் மழை பெஞ்சுது! நான் மழையில நனைஞ்சுகிட்டு, ரோட்டில போய்க்கிட்டு இருந்தேன்! அப்போது என்கூட பத்தாம் வகுப்புல 4 வாட்டி ஒண்ணாப் படிச்ச பஞ்சவர்ணம் என் எதிரே வந்தாள்! அவளிடம் இரண்டு குடைகள் இருந்திச்சு! ஒண்ணு சிவப்பு! மத்தது கறுப்பு! அவகிட்ட ஒரு குடை தர்ரியான்னு கேட்டேன்! அவ சரின்னா! “ உனக்கு சிவப்பு குடை வேணுமா? கறுப்பு குடை வேணுமா?” அப்டீன்னு கேட்டா! நான் சொன்னேன்! எனக்கு கறுப்பு நிறம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அதுலான சிவப்பு குடையைத் தா”னு சொன்னேன்!
அதுக்கு அவ ஒரு போட்டி வைக்கலாம்னு சொன்னா! என்ன போட்டின்னு கேட்டேன்! ” ரெண்டு பேரும் ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எண்ணுவோம்! யாரு மொதல்ல எண்ணி முடிக்கிறாய்ங்களோ, அவருக்கு சிவப்புக் குடை” அப்டீன்னு டிசைட் பண்ணினோம்! நான் உடனே அண்ண ஆரம்பிச்சேன்! பஞ்சவர்ணமும் குடைய கீழே போட்டுட்டு, எண்ண ஆரம்பிச்சா!
எனக்கு, எண்பதுக்குப் பிறகு எண்பத்தி ஒண்ணு வருமா? எழுபத்தி ஒண்ணு வருமா?ன்னு ஒரே குழப்பமா இருந்திச்சு! அதுனால நான் தடுமாறிகிட்டு இருந்தேன்! பஞ்சவர்ணம் உடனே எண்ணி முடிச்சுட்டா! ஸோ, அவதான் வின் பண்ணிட்டா! சரி சிவப்பு குடைய நீயே எடுத்துக்கோன்னு சொல்லிட்டேன்! அவ குடைய எடுக்க, கீழே பார்த்தா! அங்க தண்ணீரில என்னோட உருவம் தெரிஞ்சிச்சு! ஆனா, குடைய காணல! வெள்ளம் கொண்டு போயிடுச்சு!
” நாம ரெண்டு பேருமே இவ்ளோ நேரமும் நனைஞ்சுக்கிட்டு இருந்திருக்கோமே! இது நமக்குத் தெரியாமல் போய்ச்சே”னு பஞ்சவர்ணம் சொன்னா! உடனே நான் சொன்னேன் “ அப்டீன்னா நாம லவ் பண்றோம் போல! அதுதான் மழை பெஞ்சது நமக்குத் தெரியல” உடனே பஞ்சவர்ணம் என்னைப் பார்த்து சொன்னா “ மணி, இவ்வளவு கடும் மழைக்குள்ளும் நீ நல்லா மணி மணியா பேசுறியே! நீ தான் என் வருங்கால புருஷன்” அப்டீன்னா!
உடனே நான் அவளைப் பார்த்து “ ஐ லவ் யூ பஞ்சவர்ணம்”னு சொன்னேன்! அதுக்கு அவ செருப்பைக் கழட்டி எனக்கு அடிச்சுட்டா! அது ஏன்னு கேக்குறீங்களா?
( தொடரும்.....! )


24 comments:
// நாலுலட்சத்து முப்பது லட்சம் //
ஆரம்பமே தப்பா இருக்கே. இருங்க படிச்சுட்டு வாரேன்.
ஸ்ஸ்ஸ்ஸ் .... ஏன் உங்க வாழ்க்கை இவ்வளவு --------- (விரும்பிய வசனத்தை போட்டுக்கங்க) இருக்கு?
ஏலேய் தில்லாலங்கடி,
நான் வர முன்னாடி,
ஹாலிவூட் முந்திட்டாரே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆகா, ஆட்டம் ஆரம்பமாகிடுச்சா..
நீ நடத்து ராசா!
எல்லோருக்கும் ஞாயிற்றுக்கிழமை அந்திநேர வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
//
எனக்கு அந்தி நேரத் தென்றல் காற்றுத் தான் நினைவிற்கு வருது,
நான் இஞ்சை சாமக் கோழி முழிச்சிட்டு இருக்கேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மணி உம்மழுக்கு உடம்பில மச்சமிருக்கா அல்லது மச்சத்தில உடம்பிருக்கா....
ஆளின்ர அளவில அவருக்கு 13 வயசில ஆரம்பிச்சசுதாம்... இதை நாம நம்பணுமாம்...
//அப்பத்தான் எனக்கும் யாரையாச்சும் லவ் பண்ணணும்னு தோணிச்சுது! என்னோட சயன்ஸ்டீச்சர், மதமெட்டிக்ஸ் மாஸ்டரை லவ் பண்ணியதால, என்னால மியூசிக் டீச்சர லவ் பண்ண முடியல!//
யோ மணி அப்படின்னா கிஸ்டரி ரீச்சரை லவ்பண்ணியிருக்கலாமே நிறைய பழைய கதையெல்லாம் சொல்லியிருப்பாவே
ரொம்ப வில்லங்கமான மாற்றராக இருக்கே. பதின்னாலு வயசிலையே பக்கத்து பெஞ் பையனுக்கு பண்ணிவச்சிட்டீரா? தொடருங்கோ சேவையை.
என்னோட பர்ஸ்ட் லவ்வு பத்தி பதிவு போடச் சொல்லி, இதுவரைக்கும் நாலுலட்சத்து முப்பது லட்சம் மெயில் வந்திருக்கு! அதுல பாதி மெயில் இங்கிலீசுல இருக்குறதால நான் படிச்சுப் பார்க்கல! //
மச்சி..இது என்னோட லப் பதிவுக்கு எதிர்ப் பதிவு இல்லைத் தானே..
ஏன்னா எனக்கு இங்கிலீசு ரீட் பன்ணத்தான் தெரியுமே தவிர வாசிக்கத் தெரியாது! சரி வாங்க என்னோட பர்ஸ்ட் லவ்வு பத்தி சொல்றேன்!//
கன்றாவி!
கஸ்மாளம்!
ஏன்யா உனக்கு இந்த குணம்!
உண்மையிலே உனக்கு இங்கிபீசு தெரியாதென்று சொன்னதால் தானே வட்டக்கச்சி ராணியை நான் லவ்வியிருக்கேன்.,
ஓகோ! படத்தைப் பார்க்காம லவ் பண்ணணும் போல”னு நெனைச்சுக்கிட்டு, நான் தியேட்டர் வாசலில வேர்க்கடலை வாங்கி கொறிச்சுக்கிட்டு, வீட்டுக்கு வந்துட்டேன்!//
பன்னாடை! நானும் சீரியஸ் பதிவு என்று வந்தேன்!
நீயோ மொக்கை போட்டு என்னை கொன்னு புட்டியே..
சாமக் கோழி முழுச்சிருக்கேன்! கொஞ்சம் சூடா ஏதாச்சும் குடுக்கிறது.
சிரி மளாவுக்கும் லவ்வு ஸ்டார்ட் ஆகிட்டுது! அவங்க அடுத்தமாசமே கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டாங்க! அப்போ எனக்கு 14 வயசு!
//
அடோய் நாதாரி!
அப்படீன்னா அவங்க ஏலவே ரகசிய லவ்வு பண்ணியிருப்பாங்களோ!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உடனே நான் அவளைப் பார்த்து “ ஐ லவ் யூ பஞ்சவர்ணம்”னு சொன்னேன்! அதுக்கு அவ செருப்பைக் கழட்டி எனக்கு அடிச்சுட்டா! அது ஏன்னு கேக்குறீங்களா?
//
இதிலையும் ருவிட்ஸா..
முடியலை சரவணா!
ஒரேயொரு டவுட்டு மச்சி!
இதன் அடுத்த பாகம் வருமா! இல்லே வராதா!
இந்த தமிழ் ஆதி சைட்டில தொடரும் போட்டால் தொடாருதுன்னு கடந்த பதிவுகள் சொல்லுது!
அப்படியே, ஆழ ஊடுருவித் தாக்கும் அணி பத்தின பதிவையும் சொல்லிடு!
என்ர செல்லமே உனக்கு தொடரும் என்றால் என்னவென்று விளங்கவில்லையா.!!!?
இப்படித்தான் நீ அதிகமான பதிவுகளில் தொடரும் என்று போட்டிருக்கிறாய் நானும் அணில் ஏறவிட்ட நாய் போல காத்திருந்தேன் ஒன்றுமே நடக்கல இதை ஆவுதல் தொடர்வாயா?
அண்ணே...
பஞ்சவர்ணம் ஓ.க., ஆனா.. அந்த கிளிநொச்சி கவிதாவப்பத்தி சொல்லுவீங்களா? மாட்டீங்களா?
ஒங்களுக்கு பதினாலு வயசு.
ஒங்க ஃப்ரெண்ஸ் அடுத்த மாசமே கலியாணம் பண்ணி, கொழந்தை பெத்துக்கிட்டாய்ங்க?
கும்புடுறேனுங்க!
அப்புறம் அந்த லவ்வு என்னாச்சு?
நானும் ஒருத்திய லவ் பண்ணினேன், ஆனால் அவளோ அவ புருஷன்கூட இருந்த தகராருல என்னைய டீல்ல விட்டுட்டா...
மணி, அது என்ன 'மணி மணியா' பேசுறது?
ஆனா, குடைய காணல! வெள்ளம்
கொண்டு போயிடுச்சு!
////
குடை போச்சே! ;-)
மொத்தத்தில் மணி காதல் மண்ணாங்கட்டி காதல்! வரேன்.
கும்புடுறேனுங்க!
காதல்கோட்டை படம் வந்து செமையா போயிட்டு இருந்திச்சு! //
நான் தியேட்டரில் பார்த்த முதல் படம்
///அதுக்கு அவ ஒரு போட்டி வைக்கலாம்னு சொன்னா! ///
மாப்பு இதுக்கெல்லாம போட்டி.. நடத்துங்க...
Post a Comment